
தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர் தனுஷ் உடனான திருமண வாழ்வை முறித்த நிலையில் போயஸ் கார்டனில் உள்ள தனது அப்பா ரஜினிகாந்த் வீட்டில்தான் வசித்து வந்தாராம் ஐஸ்வர்யா. தனக்கென தனி வீடு ஒன்றை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த வீட்டை வாங்கியுள்ளதாகத் தகவல். தற்போது அந்த வீட்டிற்கான இன்டீரியர் வேலைகள் நடந்து வருகின்றன. விரைவில் அந்த வீட்டிற்கு குடி போக உள்ளாராம் ஐஸ்வர்யா. அவருடன் மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோரும் செல்வார்கள் எனத் தெரிகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!