Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

வாலிபமே வா

வாலிபமே வா,
  • வாலிபமே வா
  • புதுமுகம் கார்த்திக்
  • கிரண்
  • இயக்குனர்: நரசிம்மா
28 ஜூலை, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » வாலிபமே வா

ஜோதி பிலிம்ஸ் பேக்டரி என்ற படநிறுவனம் தயாரிக்கும் புதிய படம் வாலிபமே வா. நாயகனாக புதுமுகம் கார்த்திக் நடிக்க, நாயகியாக கிரண்நடிக்கிறார். படத்தின் கதைப்படி கத‌ாநாயகனைவிட வயதில் மூத்தவரான சாப்ட்வேர் என்ஜினியராக நடிக்கிறார் கிரண். அவருடன் நட்பாக பழகும் கார்த்திக், கிரணின் இளமை திமிரும் அழகில் மயங்கி, அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் கார்த்திக்கின் மனதில் உள்ள மோகத்தை புரிந்து கொள்ளாமல் அவரிடம் நட்பாகப் பழகுகிறார் கிரண். ஒரு கட்டத்தில் அவரது மனதில் தன்னைப் பற்றி உள்ள தவறான எண்ணத்தை புரிந்து கொண்டு, அவருக்கு அறிவுரை கூறி, காதலுக்கும் காமத்துக்கும் உள்ள வித்தியாசத்தை புரிய வைக்கிறார். முழுக்க முழுக்க இளைஞர்களுக்கு பிடித்தமான காட்சிமயைப்புகளுடன் உருவாகிறது வாலிபமே வா.

படத்திற்கு ஒளிப்பதிவை கல்யாண் கவனிக்க, சாகித் சாய்ராம் இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற டைரக்டர் நரசிம்மா இயக்குகிறார்.

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in