
ஓவர் பில்டப்பால் புலம்பும் வாரிசு நடிகை
ஆக 30, 2026
Advertisement
கல்விக் கடவுள் பெயரில், சொந்தமாக படம் தயாரித்து, இயக்கி, நடித்த நாட்டாமை நடிகரின் வாரிசு நடிகை, அந்த படம் ரிலீஸாவதற்கு முன்பே, "இனிமேல் நான் தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் ஆகிவிடுவேன். அதன்பின், என் இயக்கத்தில் நடிப்பதற்கு முன்னணி நடிகர்களே நீண்ட வரிசையில் நிற்பர்..." என்று ஓவர், "பில்டப்" கொடுத்தார். ஆனால், அந்த படமோ படுதோல்வி அடைந்து விட்டது.
அதையடுத்து இப்போது அவர் எந்த இயக்குனரிடம் சென்று வாய்ப்பு கேட்டாலும், "நீங்களே பெரிய இயக்குனர் ஆச்சே, நாங்க என்ன வாய்ப்பு தர்றது?" என, நைஸாக பேசி கழட்டி விடுகின்றனர். இதனால்,"ஓவர், "பில்டப்" கொடுத்து விட்டேனே..." என்று புலம்பி திரிகிறார், வாரிசு நடிகை.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!