
பரிதாப நிலையில் புலம்பும் நடிகர்
அக் 11, 2026
Advertisement
சார்பட்டா நடிகரின் "மார்க்கெட்" வீழ்ந்து கிடப்பதால், அதை துாக்கி நிறுத்த, சில படங்களை அவரே தயாரித்து, நடித்தார். ஆனால், அந்த படங்களும் சறுக்கிவிட, கையை சுட்டுக் கொண்டார். அதையடுத்து, தற்போது அவரிடம் கதை சொல்லிய இயக்குனர்களும், தயாரிப்பாளர்கள் கிடைக்காததால், அவரையே தயாரித்து நடிக்குமாறு கேட்டனர்.
அதற்கு, சார்பட்டா நடிகரோ, "ஏற்கனவே படம் தயாரித்து இரண்டு வீடுகளை விற்றுவிட்டேன். அதோடு என் மனைவி மூலமாக வாங்கிய கடனுக்காக மும்பை, "பைனான்சியர்" என்னை துரத்திக்கொண்டிருக்கிறார். சொந்தமாக படமெடுத்து தெருவுக்கே வந்து விட்டேன். இதற்கு மேலும் நான் படம் தயாரிக்க வேண்டுமா? இப்படியே போனால் நடிப்புக்கே முழுக்குப் போட்டு ஓடி விடுவேன்..." என்று தன் பரிதாப நிலையை சொல்லி, புலம்புகிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!