
ஜெயிலர் 2 படத்தின் மற்றுமொரு புதிய சாதனை
தென்னிந்திய அளவில் இப்படம் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அதாவது தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் இப்படம் 75 கோடி வசூலைக் கடந்த முதல் படமாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் 200 கோடியை நெருங்கி வருகிறது என்கிறார்கள். ஆந்திரா, தெலங்கானா ஆகிய தெலுங்கு மாநிலங்களில் தெலுங்குப் பதிப்பில் மட்டுமே 95 கோடியைக் கடந்துள்ளது. கர்நாடகாவில் 87 கோடி, கேரளாவில் 75 கோடி வசூலையும் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் அதிக வசூலைக் குவித்த படங்களில் முதலிடத்தில் இருப்பதாக சொல்லப்படும் "2.0" படத்தின் வசூலை "ஜெயிலர் 2" முறியடித்துள்ளதாகவும் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வந்து கொண்டிருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…