
தீபாவளிக்கு சிம்பு படங்களின் அப்டேட்
கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆரம்பமான படப்பிடிப்பு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வருடத்தில் இப்படத்தை வெளியிட முதலில் திட்டமிட்டிருந்ததாகச் சொன்னார்கள். தற்போதுள்ள நிலையில் அடுத்த வருடம்தான் இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதனிடையே, "அரசன்" படத்தின் எதிர்பார்ப்பில் உள்ள ரசிகர்களைத் திருப்திப்படுத்த ஒரு வீடியோவை தீபாவளியை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
அது மட்டுமல்லாது சிம்பு அடுத்த நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பும் வெளியாகும் என்கிறார்கள். சிம்புவின் 49வது படமாக "பார்க்கிங்" இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு கடந்த வருடம் வெளிவந்தது. ஆனால், அதன் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.
"கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 50வது படத்தின் அறிவிப்பும், ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் "தர்மன்" படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்புவின் 51வது படத்தின் அறிவிப்பும் வெளியாகி இருந்தது.
தீபாவளிக்கு வெளிவர உள்ள சிம்புவின் புதிய பட அறிவிப்பில் இந்தப் படங்களின் அப்டேட் இருக்குமா அல்லது வேறொரு இயக்குனரின் படமா என்பது அறிவிப்பு வரும் போது தெரிய வரும்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…