இயக்குநரான எடிட்டர் : பிரேம்ஜி ஹீரோ
அக் 31, 2026
Advertisement
"வல்லமை", "நரி வேட்டை" உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய சி. கணேஷ்குமார், அபிராமி புரொடக்ஷன்ஸ் பேனரில் லாவண்யா அபிராமி தயாரிக்கும் புதிய படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார்.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் பிரேம்ஜி கதையின் நாயகனாக நடிக்கிறார். அவரே படத்திற்கு இசையும் அமைக்கிறார். நயனா சாய் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் போஸ் வெங்கட், சஸ்திக் நடிக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குநர் சி. கணேஷ் குமார் கூறும்போது, "தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. இதுவரை ஏற்றிராத வேடத்தில் பிரேம்ஜி அமரன் இந்த படத்தில் நடிக்கிறார். போஸ் வெங்கட் போன்ற அனுபவமிக்க நடிகர்களோடு பணிபுரிவது சிறந்த அனுபவமாக உள்ளது," என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…