
கவனம் பெறாத பாக்கெட் நாவல் இசையமைப்பாளர் மாற்ற அறிவிப்பு
அவரது மூன்றாவது படமாக "பாக்கெட் நாவல்" படத்தின் அறிவிப்பு வந்ததுமே ரசிகர்கள் மகிழ்ந்தார்கள். அதற்கு இசையமைப்பாளர் இளையராஜா என்பதும் கூடுதல் சிறப்பாக இருந்தது.
முதல் இரண்டு படங்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை, மூன்றாவது படத்திற்கு இளையராஜாவுடன் தியாகராஜன் இணைவதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. ஆனால், கடந்த சில வாரங்களாக அப்படத்திலிருந்து இளையராஜா விலகிவிட்டார், அவருக்குப் பதிலாக ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கப் போகிறார் என்ற தகவல்கள் வர ஆரம்பித்தது.
இந்நிலையில் படக்குழுவினர் இசையமைப்பாளர் மாற்றம் குறித்த அறிவிப்பை, ஒரு வீடியோவுடன் நேற்று வெளியிட்டனர். அதில், “இனி, இது வெறும் வதந்தி அல்ல" எனக் குறிப்பிட்டு ஜிவி பிரகாஷ்குமார் படத்தின் இசையமைப்பாளர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
இளையராஜாவுக்குப் பதிலாக ஜிவி பிரகாஷ்குமார் என்ற தகவல் வந்த போது இருந்த பரபரப்பு, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்பு இல்லாமல் போனது. அந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் இளையராஜா, யுவன் இந்தப் படத்திற்கு இல்லாமல் போனது வருத்தம் என பலரும் பதிவிட்டுள்ளார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…