
அப்செப்டில் நடிகர்; திருமணத்தை எதிர்பார்க்கும் நடிகை
செப் 13, 2026
Advertisement
ஆறெழுத்து நடிகையை திருமணம் செய்துகொள்ளத் தயாரான, சண்டக்கோழி நடிகர், சமீபத்தில் தான் இயக்கி, நடித்த கிரீடம் என்ற பொருள் தரும் படம் "ஹிட்" ஆனால், அந்த வெற்றிக் களிப்போடு திருமணத்தை நடத்தலாம் என்று வருங்கால மனைவியிடம் கூறியிருந்தார். ஆனால், அந்தப் படம், "பிளாப்" ஆகிவிட்டதால், இப்போது நடிகர் கடும், "அப்செட்"டில் இருப்பதோடு, அந்த நடிகை திருமணப் பேச்சை எடுத்தாலே, "இப்போது நான் இருக்கும், "டென்ஷனில்" இதெல்லாம் தேவையா?" என்று எரிந்து விழுகிறார்.
நடிகரின் வார்த்தைகளை நம்பி, ஒரு ஆண்டுக்கும் மேலாக அவர் தன்னைத் திருமணம் செய்து கொள்வார் என்று காத்திருந்தார் அந்த ஆறெழுத்து நடிகை.
ஆனால், இப்போது இந்தத் திருமணம் நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகத்தில், தன் ஜாதகத்துடன் ஜோதிடர்களை தேடிச் சென்று வருகிறார், நடிகை.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!