
தயாரிப்பில் இருந்து எஸ்கேப் ஆகும் உச்ச நடிகர்
ஆக 30, 2026
Advertisement
"சினிமாவில் இவ்வளவு காலமும் நடித்து கல்லா மட்டுமே கட்டி வருகிறீர்கள். அதனால், இனிமேலாவது உலக நடிகரை போல நீங்களும் இளவட்ட நடிகர்களை வைத்து படம் தயாரித்து கலைச்சேவை செய்யுங்கள்..." என்று சிலர், உச்ச நடிகரிடம் கேட்டுக்கொண்டனர். அதற்கு நடிகரோ, "நான் தயாரித்த எந்தப் படமும் எனக்கு லாபத்தை கொடுத்ததில்லை; எல்லாமே கையை கடிச்சிடுச்சி. அதனால், இனிமேல் அந்த, "ரிஸ்க்"கெல்லாம் எனக்கு வேண்டாம் சாமி..." என, "எஸ்கேப்" ஆகிவிட்டார்.
அதைப்பார்த்து, "சினிமாவில் தான் சம்பாத்தித்த காசை சிந்தாமல், சிதறாமல், 10 தலைமுறைக்கும் சேர்த்து வைத்து விட வேண்டும் என்பதில் இவர் எவ்வளவு உஷாராக இருக்கிறார் பார்த்தீர்களா?" என்று சினிமாத்துறையின் அபிமானிகளே, உச்ச நடிகரை கலாய்த்து வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!