
மாஸ் பசங்க வெர்சஸ் கிளாஸ் பொண்ணுங்க
அக் 07, 2026
Advertisement
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "மாஸ் பசங்க வெர்சஸ் கிளாஸ் பொண்ணுங்க" என்ற ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது. இதனை சரிகம நிறுவனம் நடத்துகிறது. நிகழ்ச்சியின் நடுவர்களான ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார். இதன் அறிமுக நிகழ்வு நடந்தது. இதில் நடிகர் ஆர்யா, நடிகை ரெஜினா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி குறித்து ஆர்யா பேசும்போது, ""இது 100 சதவீதம் பொழுதுபோக்கிற்கு கியாரண்டி தருகிற நிகழ்ச்சி. நிறைய செலிபிரிட்டிகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மாஸ் பசங்களும், கிளாஸ் பொண்ணுங்களும் அவர்களின் திறமை, ஸ்டைல், எமோல்சன் எல்லாவற்றையும் வெளிப்படுத்துவார்கள். இது வெறும் போட்டி இல்லை. நட்பு, வேடிக்கை எல்லாமே இதில் இருக்கும்"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!