சர்ச்சையான பஹல்காம் தாக்குதல் அறிக்கை : விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி | ''எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் லாலேட்டா'' ; வெளிப்படையாகவே கோரிக்கை வைத்த '2018' பட இயக்குனர் | சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோகர் | இரண்டாம் ராணி எலிசெபத்திற்கு பிறகு ராம்சரணுக்கு செல்லப்பிராணியால் கிடைத்த பெருமை | பத்மபூஷன் விருது : குடும்பத்துடன் டில்லியில் அஜித் | 'தொடரும்' பட போஸ்டர் மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வு ; போலீஸுக்கே பூமராங் ஆக திரும்பிய கருத்துக்கள் | நடிகை ரன்யா ராவ் மீது காபிபோசா சட்டம் பாய்ந்தது ; ஒரு வருடத்திற்கு ஜாமின் கிடையாது | தொடரும் கதை என்னுடையது ; உதவி இயக்குனர் போலீஸில் புகார் | மே 23ல் ‛படை தலைவன்' ரிலீஸ் | பிளாஷ்பேக்: தொடர்கதையாக வந்து பின் சினிமாவான “தியாக பூமி” |
மலையாளத்தில் சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'தொடரும்' திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் அனைவரும் 'எம்புரான்' படத்தில் எங்களுக்கு கிடைத்த ஏமாற்றத்தை இந்த படம் நிவர்த்தி செய்து விட்டது என்று கூறுவதை பல இடங்களில் பார்க்க முடிகிறது.
ரசிகர்களை மட்டுமல்ல பிரபலங்கள் பலரையும் இந்த படம் பிரமிக்க வைத்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் '2018' என்கிற படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கி இருந்தார். மோகன்லால் நடித்த 'லூசிபர்' படம் பாக்ஸ் ஆபீசில் வைத்திருந்த வசூல் சாதனையை இந்த படம் தான் அடுத்ததாக முறியடித்தது.
அப்படிப்பட்ட வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப், மோகன்லாலின் 'தொடரும்' படத்தை பார்த்துவிட்டு படத்தையும் மோகன்லால் மற்றும் படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பையும் பாராட்டி உள்ளார். அதுமட்டுமல்ல இறுதியாக, “லாலேட்டா எனக்கு தயவு செய்து உங்களுடன் பணியாற்ற ஒரு வாய்ப்பு கொடுங்கள். அது என்னுடைய கனவு” என்று அவர் கூறியுள்ளார். மிகப்பெரிய வசூல் சாதனை செய்த படத்தை கொடுத்தவர் என்பதால் இவரது கோரிக்கையை மோகன்லால் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.