இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் முதல் முறையாக நடிகர் வடிவேலு முழு நீள குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் வடிவேலு மற்றும் பஹத் பாசில் இருவரின் கூட்டணி மிகப்பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனது. இந்த காம்போவுக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டமே உருவானது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இயக்குனர் சுதீஷ் சங்கர் இவர்களை வைத்து மாரீசன் என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டார், வரும் ஜூலை 24ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதில் பஹத் பாசில் திருடனாகவும் வடிவேலுவிடம் இருந்து பணத்தை அபகரிக்க முயற்சி செய்வதாகவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதேசமயம் வடிவேலு இந்த படத்தில் அல்சீமர் என்கிற ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாதாரண ஞாபக மறதியாக இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக தனது அன்றாட செயல்பாடுகளையே மறக்க கூடிய ஒரு நோய் தான் இந்த அல்சீமர்.
இப்படி ஒரு கதாபாத்திரத்தில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான தன்மாத்ரா என்கிற படத்தில் நடிகர் மோகன்லால் அற்புதமாக நடித்திருந்தார். அதன்பிறகு இந்த நோயால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்களை வைத்து பெரிய அளவில் படங்கள் வெளியாகவில்லை. இந்த அல்சீமரால் பாதிக்கப்பட கதாபாத்திரத்திலும் மாமன்னன் போலவே ரசிகர்களின் கவனத்தை வடிவேலு ஈர்ப்பார் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.