காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
இந்த வருடம் நடிகர் மோகன்லால் வருடம் என்று சொல்லும் அளவிற்கு மோகன்லால் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. கடந்த மார்ச்சில் ‛எல்-2 எம்புரான்' அதன்பிறகு ஏப்ரலில் வெளியான தொடரும் என இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தன. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் உருவாகி பான் இந்தியா படமாக சமீபத்தில் வெளியான கண்ணப்பா திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோட்டத்தில் நடித்திருந்தார் மோகன்லால். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகி வந்த ஹிருதயபூர்வம் என்கிற படத்தில் நடித்துள்ளார் மோகன்லால். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, பிரேமலு புகழ் காமெடி நடிகர் சங்கீத் பிரதாப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஓணம் பண்டிகை ரிலீஸ் ஆக ஆகஸ்ட் 28ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. தொடரும் பட வெற்றிக்குப்பிறகு வெளியாகும் படம் என்பதாலும் கடந்த 2015ல் சத்யன் அந்திக்காடு, மோகன்லால் கூட்டணியில் வெளியான என்னும் எப்பொழுதும் படத்தை தொடர்ந்து 10 வருடங்களுக்குப் பிறகு இந்த படம் வெளியாவதாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது..