'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி |

மோகன்லால் நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 10 வருடங்களில் அடுத்தடுத்து வெளியான 'திரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்களும் மலையாளத்தையும் தாண்டி தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. பாலிவுட்டில் கூட இந்த இரண்டு பாகங்களும் ரீமேக் செய்யப்பட்டு மூன்றாவது பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கி கேரளாவில் 'திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மோகன்லாலுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளன. இதனை தொடர்ந்து படக்குழுவினரிடம் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் அவர்களிடமிருந்து விடை பெற்றார்.




