இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
மலையாள திரையுலகில் சமீபத்தில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையை தொடர்ந்து சில நடிகைகள் தாங்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக கூறி குற்றம் சாட்டிய நடிகர்களில் சீனியர் நடிகரும் தற்போது கொல்லம் தொகுதி எம்எல்ஏ.,வாக இருப்பவருமான நடிகர் முகேஷும் ஒருவர். இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது முன் ஜாமின் பெற்றுள்ளார். இவர் நடிகை சரிதாவின் முன்னாள் கணவர் என்பதும் இவர் தன்னை கொடுமைப்படுத்தியது குறித்து சரிதா சில வருடங்களுக்கு முன்பே விரிவாக பேட்டி கொடுத்திருந்தது தற்போது மீடியாவில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் 2011ல் சரிதாவை விவாகரத்து செய்த பின்னர் 2013ல் மெத்தில் தேவிகா என்கிற நாடக நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் முகேஷ். சில வருடங்கள் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல தோன்றினாலும் கடந்த 2021ல் முகேஷிடம் இருந்து விவாகரத்து பெற விண்ணப்பித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் மெத்தில் தேவிகா. இதற்கு அவர் அப்போது காரணமாக கூறியது திருமணம் ஆகி 8 வருடங்களாகியும் கூட என்னால் அவரை (முகேஷை) புரிந்து கொள்ளவே முடியவில்லை என்பதுதான். தற்போது முகேஷ் மீது பாலியல் ரீதியான வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் முகேஷ் குறித்து மீண்டும் மனம் திறந்து உள்ளார் மெத்தில் தேவிகா.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த பிரச்னைகள் எல்லாம் அவர் அரசியலுக்குள் அடி எடுத்து வைத்த பின்னர் அவரைத் தேடி வந்தவை. இப்படியெல்லாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பது அவருக்கும் தெரியும். நான் அவரைப் பற்றி அறிந்து கொண்டதிலிருந்து அவர் மிகவும் நல்ல மனிதர். ஆனால் ஒரு நல்ல கணவராக அவர் எப்போதும் இருந்ததில்லை. நான் அவரிடம் இருந்து விவாகரத்திற்கு விண்ணப்பித்தது என்னுடைய சொந்த காரணங்களுக்காக தான்” என்று கூறியுள்ளார்.