ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரை உலகில் பல வருடங்களாக நடிகைகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் பாலியல் தொந்தரவுகள் குறித்து வெளிச்சம் போட்டு காட்டியது. இதைத் தொடர்ந்து பலரும் தைரியமாக முன்வைத்து பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் களை கொடுக்க ஆரம்பித்தார்கள். இதில் பிரபல நடிகர்களான முகேஷ், சித்திக், ஜெயசூர்யா உள்ளிட்ட பலர் மீது வழக்குகள் பதியப்பட்டன. இதில் நடிகரும் எம்எல்ஏவும் ஆன முகேஷ் மீது பெண் நடிகை ஒருவர் தொடர்ந்து வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது புகார் அளித்த அந்த நடிகை தான் இனிமேல் இந்த வழக்கில் தொடர்ந்து ஆர்வம் காட்டப் போவதில்லை என்று விரக்தியுடன் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறும்போது, “இப்படி தைரியமாக முன்வந்து புகார் அளித்த எனக்கு அரசு தரப்பில் இருந்து எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்கப்படவில்லை. அவர்கள் ரொம்பவே கவனக்குறைவாக இருக்கிறார்கள். அதனால் தொடர்ந்து இந்த வழக்கில் என்னால் ஆர்வம் காட்ட முடியாத அளவிற்கு சோர்வுற்று விட்டேன். அதற்காக யாருடனும் சமரசமாக சென்றுவிட்டேன் என்று அர்த்தம் இல்லை. நான் ஒரு அப்பாவி. எனக்கு நீதி வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக போக்சோ வழக்கு பதிய வேண்டும். ஒருவேளை எனக்கு ஏற்படும் பிரச்சனைகளால் நான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு இந்த அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று விரத்தியுடன் கூறியுள்ளார்.