‛‛ஒவ்வொரு மூச்சும் புதிய துவக்கம்'': ஓவியா | சீனாவில் ரூ.56 கோடி வசூலைக் கடந்த மகாராஜா! | மதுரை அழகர்கோயிலில் மனைவியுடன் தரிசனம் செய்த சிவகார்த்திகேயன் | அஜித்தின் விடாமுயற்சி படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா? | ஹனிமூனுக்காக ஐஸ்லாந்த் நாட்டுக்கு செல்லும் நாகசைதன்யா- சோபிதா! | பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் செயல் - டீப் பேக் வீடியோ குறித்து பிரக்யா நாக்ரா அதிர்ச்சி | ராஜ்குமார் ராவின் சகோதரர் அமித் ராவ் அறிமுகமாகும் ‛தி டைரி ஆப் மணிப்பூர்' | குருவாயூரில் நடந்த காளிதாஸ் ஜெயராம் - தாரிணி திருமணம்! | மீண்டும் எல்ரெட் குமார் தயாரிப்பில் சூரி! | எப். பி. ஜோர்ன் வாட்ச் மேக்கரை சந்தித்த தனுஷ்! |
நடிகையின் குற்றச்சாட்டை தொடர்ந்து, கேரள காவல்துறை ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் முகேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து தன்னை கைது செய்வதற்கு தடை கோரி எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றத்தில் முகேஷ் மனு அளித்திருந்த நிலையில், 5 நாட்கள் அவரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. இக்குழுவின் அறிக்கை கடந்த மாதம் வெளியாகி மலையாள திரையுலகை அதிரவைத்துள்ளது. நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித், நடிகரும் எம்எல்ஏ.,வுமான முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்டோர் மீது சில நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனை தொடர்ந்து ரஞ்சித், சித்திக், முகேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்தனர்.
அந்த வழக்கில் இருந்து தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று நடிகர் முகேஷ், எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், முகேஷ்க்கு முன்ஜாமின் வழங்கியதுடன், ஐந்து நாட்களுக்கு கைது செய்யவும் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் இன்று (செப்.,24) முகேஷை கைது செய்த போலீசார், கொச்சியில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் முடிவில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. விசாரணை குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் சொல்லாமல் புறப்பட்டு சென்றார்.
சித்திக்கிற்கு ஜாமின் மறுப்பு
பிரபல மலையாளர் நடிகர் சித்திக் 2016ல் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை ஒருவர் போலீசில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார், நடிகர் சித்திக்கிற்கு எதிராக பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். மலையாள திரையுலகில் பெண்கள் அளித்த புகார்கள் தொடர்பாக இதுவரை 23 வழக்குகளை எஸ்ஐடி பதிவு செய்துள்ளது.
23 வழக்குகளில், சித்திக் மீதான வழக்கில் அதிகபட்ச ஆதாரங்களை போலீசார் மீட்டுள்ளதாக தெரிகிறது. ஹோட்டலில் நடந்த சாட்சிய சேகரிப்பில், சித்திக் மற்றும் புகார்தாரரும் ஒரே காலகட்டத்தில் ஹோட்டலில் தங்கியிருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர். இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி, சித்திக் கேரளா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.