23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை |
மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரபல பின்னணி பாடகி பி சுசீலா மற்றும் பாடலாசிரியர் மு.மேத்தா ஆகியோருக்கு “கருணாநிதி நினைவு கலைத்துறை வித்தகர் விருது” அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டும் வகையில் தமிழக அரசின் சார்பில், கருணாநிதி நினைவு கலைத்துறை வித்தகர் விருது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ம் தேதி வழங்கப்படும். கடந்த 2023ம் ஆண்டுக்கான விருது, பின்னணிப் பாடகி பி.சுசீலா மற்றும் கவிஞர் மு.மேத்தாவுக்கு கருணாநிதி கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும்.
பாடகி சுசீலா, 70 ஆண்டுக்கும் மேலான தன் இசைப்பயணத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பாடி சாதனை படைத்தவர்.
கவிஞர் மு.மேத்தா, மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல்வேறு படைப்புகளை உருவாக்கியவர். 70க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்களை எழுதி, தனி முத்திரை பதித்தவர். மாநிலக்கல்லுாரி பேராசிரியராக பணியாற்றியவர். விருதாளர்களுக்கு ரூ.10 லட்சமும், நினைவுப் பரிசும் வழங்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விருது, வரும் 30ம் தேதி தலைமை செயலகத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது.