நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? |
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று(செப்., 24) காலையில் 11 மணியளவில் நடந்தது. கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தயாரிப்பாளர்கள் கவனத்திற்கு...
1. பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் கழித்தும், அதற்கு அடுத்து வரிசையில் உள்ள நடிகர்களில் படம் 6 வாரங்கள் கழித்தும் OTTயில் திரையிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.
2. தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தான் திரையிடப்பட வேண்டும்.
3. சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தில் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது
அரசாங்க கவனத்திற்கு...
1. திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் வசூலிக்க அனுமதி தர வேண்டுகிறோம்.
மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.250 வரையும், ஏசி திரையரங்குகளுக்கு ரூ.200 வரையும், ஏசி அல்லாத திரையரங்குகளுக்கு ரூ. 150 வரையும்
என்று கட்டணம் நிர்ணயித்து கொடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்
2. நம் பக்கத்து மாநிலங்களில் உள்ளபடி 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி வழங்கப்பட வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சி தான் திரையிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதி தர வேண்டும்.
3. ஆபரேட்டர் லைசன்ஸிற்கு தாங்கள் புதிய வழிமுறையை வகுத்து தந்தீர்கள். அது தெளிவாக இல்லாததால் அதை வைத்து எந்த பலனும் நாங்கள் அடையவில்லை. ஆகவே அதை மாற்றி நாங்கள் கேட்டது போல் ஆபரேட்டர் லைசன்ஸ் தேவையில்லை அல்லது எளிய முறையில் தரும்படி கேட்கிறோம்.
4. மால்களில் உள்ள திரையரங்குகளில் மற்ற நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கியது போல் மற்ற திரையரங்குகளுக்கு அனுமதி வழங்க கேட்கிறோம்.
5, மின் கட்டணத்தை MSME விதிகளை பின்பற்றி திரையரங்குகள் MSME-ன் கீழ் வருவதால் MSME விதிபடி எங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி கொடுத்தால் திரையரங்குகள் நஷ்டமின்றி நடத்த முடியும். நாங்கள் மிகவும் சிரமமான சூழ்நிலையில் உள்ளதால் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.