படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி | ரியோவுக்கு பிடித்த ஹீரோயின் : மனைவி சொன்ன பதில் |

ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாக மாறுவது அடிக்கடி நிகழும் விஷயம்தான். ஆனால் அந்த அளவிற்கு பட தொகுப்பாளர்கள் இயக்குனர்களாக மாறுவது குறைவுதான். அந்த வகையில் கமல் நடித்த விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகங்களுக்கும் எடிட்டராக பணியாற்றியவர் மகேஷ் நாராயணன். கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் படத்தொகுப்பாளராக பணியாற்றிய இவர் மலையாளத்தில் கடந்த 2007ல் மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த டேக் ஆப் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார்.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக 2020ல் கொரோனா காலகட்டத்தில் வெளிப்புற படப்பிடிப்பு என எதுவுமே இல்லாமல் ஆன்லைனில் வீடியோ கால் மூலமாகவே ஒரு முழு படத்தையும் மொபைல் கேமராவில் இயக்கி முடித்து சி யு சூன் என்கிற பெயரில் வெளியிட்டார். அதன் பிறகு மாலிக், மலையான் குஞ்சு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் எம்டி வாசுதேவன் நாயர் சிறுகதைகளை மையப்படுத்தி வெளியான மனோரதங்கள் என்கிற ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்ற ஷெர்லாக் என்கிற குறும்படம் உட்பட இதுவரை கிட்டத்தட்ட ஐந்து படங்களில் பஹத் பாசிலுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் மகேஷ் நாராயணன்.
இதில் நான்கு படங்களை அவரை வைத்து இயக்கியுள்ளார். மலையான் குஞ்சு படத்திற்கு கதை எழுதியுள்ளார். இந்த நிலையில் தான் தற்போது மோகன்லால், மம்முட்டி இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் மகேஷ் நாராயணன். இந்த இருபெரும் நடிகர்கள் இருந்தாலும் வழக்கம் போல அவரது ஆஸ்தான நடிகரான பஹத் பாசிலுக்கும் இதில் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளாராம் மகேஷ் நாராயணன். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிப்பதற்காக பஹகத் பாசில் கலந்து கொண்டுள்ளார். அந்த வகையில் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனராகவே மாறிவிட்டார் மகேஷ் நாராயணன்.