ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் ஆவேசம் என்கிற படம் வெளியானது. ஜித்து மாதவன் என்பவர் இயக்கியிருந்த இந்த படத்தில் ரங்கா என்கிற காமெடி தாதா கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் ஒரு தூணுக்கு பின்புறமாக நின்று கொண்டு ஒருபுறம் சீரியஸாக முகம் காட்டியும் இன்னொரு புறம் புன்னகையுடன் முகம் காட்டியும் நடித்து இடம்பெற்ற கரிருங்காலியல்லோ என்கிற பாடல் இன்று பட்டிதொட்டி எல்லாம் ரிலீஸ் வீடியோக்களாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மும்பை போலீசார் இந்த வீடியோவை பொதுமக்களின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு பிரச்சார வீடியோவாக மாற்றி வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவில் பஹத் பாசில் ஒவ்வொரு பக்கமும் தனது முகத்தை கொண்டு வரும்போது மும்பை போலீசார் தங்களது விழிப்புணர்வு எச்சரிக்கை வாசகங்களான “அவசர உதவிக்கு 100க்கு டயல் செய்யுங்கள்”, “பல எண்கள் கொண்ட சீக்ரெட் பாஸ்வேர்டை பயன்படுத்துங்கள்”, “குறிப்பிட்ட வேகத்திற்குள் வாகனத்தை ஓட்டுங்கள்”, “ஹெல்மெட் அணியாமல் ஓட்டாதீர்கள்” “சந்தேகப்படும்படி ஏதேனும் லிங்க் வந்தால் அதை தெரியப்படுத்துங்கள்” என ஒவ்வொரு வாசகங்களாக குறிப்பிட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். அவர்களது இந்த வித்தியாசமான முயற்சிக்கு பொதுமக்களிடமும் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.