காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! | கமர்ஷியல் படங்களில் உச்சம் தொடுவேன் - திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் |
படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில், வித்தியாசமான நடிப்பை வழங்கி வருபவர் நடிகர் பஹத் பாசில். குறிப்பாக கதாநாயகன், வில்லன் என எந்த கதாபாத்திரங்களில் நடித்தாலும் அதில் எவ்வளவு சீரியஸ் ஆக நடிக்கிறாரோ அதே அளவிற்கு நகைச்சுவை கலந்தும் நடித்து ரசிகர்களை வசியப்படுத்துவதில் வல்லவர்.
அந்த வகையில் சமீபத்தில் மலையாளத்தில் பஹத் பாஸில் நடித்த ஆவேசம் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ரங்கா என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பஹத் பாசில். முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படமும் பஹத் பாசிலின் கதாபாத்திரமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆவேசம் படத்தை பார்த்துவிட்டு பஹத் பாசிலை வானளாவ புகழ்ந்துள்ளார். இது குறித்து சோசியல் மீடியாவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என்ன ஒரே அற்புதமான படம். பஹத் பாசில்.. நீங்கள் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர். வித்தியாசமான எழுத்து, அதை படமாக்கிய விதம் அருமை.. மலையாள சினிமா எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிக் கொண்டு செல்கிறது. இயக்குனர் ஜித்து மாதவன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.