'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் விஜய் நேற்று சென்னையில் தனது வீடு அமைந்துள்ள நீலாங்கரை ஓட்டுச்சாவடிக்கு வந்து தனது ஓட்டை பதிவு செய்தார். தற்போது ரஷ்யாவில் கோட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஓட்டு அளிக்க வேண்டும் என்பதற்காகவே அங்கிருந்து சென்னை வந்திருக்கிறார் விஜய். மேலும் அவர் ஓட்டுச்சாவடிக்கு வந்தபோது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மீடியாக்களும் போட்டோகிராபர்களும் விஜய்யை சூழ்ந்து கொண்டார்கள். இதனால் போலீஸ் பாதுகாப்போடு ஓட்டளித்துவிட்டு சென்றார் விஜய்.
இந்த நிலையில் விஜய் மீது சென்னையைச் சார்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அதில், விஜய் ஓட்டளிக்க வரும்போது தன்னுடன் 200க்கும் மேற்பட்ட ரசிகர்களை அழைத்து வந்தார். இப்படி ஒருவர் மட்டுமே ஓட்டளிக்க 200 பேரை அழைத்து வந்ததால் அந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வந்திருந்த பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. அதனால் தேர்தல் விதிகளை மீறிய விஜய் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த புகார் அடிப்படையில் விஜய் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா? இல்லையா? என்பது விரைவில் தெரியவரும்.