தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு | உருவக்கேலி வலிகளை ஏற்படுத்தும்: பிரீத்தி அஸ்ரானி |

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ நடித்த ‛காந்தா' படம் பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் சம்பந்தப்பட்டது. அவரின் வெற்றி, தோல்வியை பேசுகிறது. அதை படக்குழு சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளது என்று செய்திகள் வந்தன. ஆனால், அது தவறான செய்தி என்று கூறப்படுகிறது. நேற்று பல இடங்களில் படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. அதை பார்த்தவர்கள் படத்தின் கதைக்கும் தியாகராஜ பாகதவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கதைப்படி, சமுத்திரக்கனி இயக்குனர், துல்கர் ஹீரோ, புதுமுக ஹீரோயின் பாக்யஸ்ரீயால் ஒரு பிரச்னை வருகிறது. அது என்ன? இயக்குனர், ஹீரோ ஈகோ பிரச்னை எதில் போய் முடிகிறது என்பது கதை. 1950களில் கதை நடக்கிறது. இந்த படத்துக்கும் எந்த உண்மை கதைக்கும் சம்பந்தம் இல்லை. படம் பார்த்தவர்கள் துல்கர் நடிப்பை புகழ்கிறார்கள். நாளை படம் வெளியானபின் ரசிகர்கள் கருத்து, வரவேற்பு தெரிய வரும். துல்கர் இதற்கு முன்பு நடித்த ப்ரீயட் படமான சீதா ராமம், லக்கி பாஸ்கர் படங்கள் வெற்றி பெற்றன. அந்த வரிசையில் காந்தாவும் சேருமா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும் என்கிறார்கள்.