'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
‛பாகுபலி' பட புகழ் ராணா டகுபதியும், ‛கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சீதா ராமம்' படங்களின் புகழ் துல்கர் சல்மானும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‛காந்தா'. இதை செல்வமனி செல்வராஜ் இயக்குகிறார். இந்த படத்தை தயாரிப்பதுடன் நாயகனாகவும் நடிக்கிறார் துல்கர் சல்மான். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் அதுபற்றிய அறிவிப்பை படக்குழுவினர் ஒவ்வொன்றாக வெளியிட உள்ளனர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பன்மொழிகளில் இந்த படம் உருவாகிறது.
“நல்ல சினிமாவின் சக்தியை நினைவூட்டும் வகையில் சிறப்பான கதையை கண்டறிவது அரிதான காரியம். காந்தா அதுபோன்ற ஒரு கதை தான். இதுவே எங்களை இணைய செய்திருக்கிறது. இந்த பயணத்தை துவங்குவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்'' என ராணா தெரிவித்துள்ளார்.