மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர இயக்குனர் கே.சுப்பிரமணியம். பாலசந்தருக்கு முன்னர் அதிக நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியவர். அவர் அறிமுகப்படுத்தியவர்கள் பிற்காலத்தில் பெரிய நட்சத்திரங்களாக வலம் வந்தார்கள். அவரது 120வது பிறந்த நாள் இன்று. அவரை பற்றிய ஒரு சுவையான தகவல் இதோ...
அசோஸியேட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை கே.பி.வெங்கடராம அய்யர் என்பவர் நடத்தி வந்தபோது, அவரிடம் உதவியாளராக சேர்ந்தவர் கும்பகோணத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி சுப்பிரமணியம். வழக்கறிஞரான அவர் சினிமா மீதிருந்த ஈடுபாட்டால் வக்கீல் தொழிலைவிட்டு சினிமாவுக்கு வந்தார். வெங்கட் ராம அய்யரிடம் தொழில் கற்ற சுப்பிரமணியம் அவரது மகள் மீனாட்சியை திருமணம் செய்து கொண்டு தயாரிப்பு நிறுவனத்தின் மொத்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். அவர்தான் இயக்குனர் கே.சுப்பிரமணியம்.
1934ம் ஆண்டு 'பவளக்கொடி' படத்தின் மூலம் இயக்குனரானார். இந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரை அறிமுகப்படுத்தினார். நாடக நடிகையும், பாடகியுமான எஸ்.டி.சுப்புலட்சுமியையும் அறிமுகப்படுத்தினார்.
பவளக்கொடி வெளிவந்த பிறகு அதில் நடித்த எஸ்.டி.சுப்புலட்சுமியை தனது முதல் மனைவியின் அனுமதியுடன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பிறகு எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் இணைந்து மெட்ராஸ் யுனைட்டெட் ஆர்டிஸ்ட் என்ற நிறுவனத்தைத் தொடங்கி பல படங்களை தயாரித்தார். தனது முதல் மற்றும் இரண்டாவது மனைவியை சமமாகவே நடத்தினார் சுப்பிரமணியம்.