பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

ஆஸ்கர் விருதுக்கு அடுத்ததாக அதற்கு இணையாக கருதப்படுவது கிராமி விருதுகள் தான். வரும் பிப்ரவரி மாதம் 67வது கிராமி விருது விழா நடைபெற இருக்கிறது. இதற்காக உலகெங்கிலும் உள்ள படங்கள் பல்வேறு போட்டி பிரிவுகளில் கலந்து கொள்வதற்காக தங்களது படங்களை அனுப்பி வருகின்றன. இந்த நிலையில் மலையாளத்தில் இந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற 'மஞ்சும்மேல் பாய்ஸ்' மற்றும் பஹத் பாசில் நடித்த 'ஆவேசம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் கிராமி விருதுகளுக்கான இசைப்பிரிவு போட்டிகளில் கலந்து கொள்ள அனுப்பப்பட்டுள்ளன.
இந்த இரண்டு படங்களுக்குமே இசையமைத்தவர் இசையமைப்பாளர் சுஷின் சியாம். இந்த இரண்டு படங்களின் வெற்றிக்கு பின்னணி இசையும் பாடலும் முக்கிய பங்கு வகித்தன என்பதை மறுக்க முடியாது. சமீபத்தில் தான் இந்தப் படங்களை கிராமி விருதுகளுக்கு அனுப்பும் பணியை செய்து முடித்ததாக கூறியுள்ள அவர், விசுவல் மீடியாவுக்கான சிறந்த ஒலிப்பதிவு தொகுப்பு என்கிற பிரிவில் ஆவேசம் படத்தையும் சிறந்த ஒலிக்கோர்வை என்கிற பிரிவில் மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தையும் அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ளார்.




