'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு |
மலையாளத்தில் கடந்த வருடம் பிப்ரவரியில் வெளியான படம் மஞ்சும்மேல் பாய்ஸ். கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் இளைஞர் கூட்டத்தில் ஒருவர் குணா குகையில் தவறி விழுந்து விட மற்றவர்கள் அவரை மீட்க நடத்தும் போராட்டம் தான் இந்த படத்தின் கதை. உணர்ச்சிகரமாக சொல்லப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபல மலையாள குணச்சித்திர காமெடி நடிகரான சவ்பின் சாஹிர் தான் இந்த படத்தை தயாரித்திருந்தார்.
இந்த படம் வெளியான சில நாட்களிலேயே கேரளாவை சேர்ந்த சிராஜ் வலையதாரா ஹமீது என்பவர், இந்த படத்தின் தயாரிப்புக்காக தான் ஏழு கோடி ரூபாய் கொடுத்ததாகவும் படம் வெளியாகி வெற்றி பெற்றதும் லாபத்தில் 40 சதவீதம் தருவதாக சொன்ன தயாரிப்பாளர்கள் சொன்னபடி தராமல் ஏமாற்றி விட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதை தொடர்ந்து மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சவ்பின் சாஹிர் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் மூவருக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டும் அவர்கள் போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் காலம் தள்ளி வந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நீதிமன்றம் பிறப்பித்த கடுமையான உத்தரவை தொடர்ந்து நேற்று போலீசார் முன் விசாரணைக்கு சவ்பின் சாகிர் ஆஜரானார்.
இந்த விசாரணையை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவித்ததாகவும் செய்தி வெளியானது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சவ்பின் சாஹிர் கூறும்போது, “என்னை யாரும் கைது செய்யவில்லை. இந்த வழக்கில் தேவை ஏற்பட்டால் அழைப்பதாக மட்டும் நிதீமன்றம் தெரிவித்திருக்கிறது. நாங்கள் யாரையும் மோசடி பண்ண வேண்டும் என நினைக்கவில்லை.
வழக்கு தொடுத்த நபருக்கு அவருடைய அசல் தொகை ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது. எங்களுக்கு படத்தின் லாபத் தொகை மற்றும் வரவேண்டிய தொகைகள் குறித்த கணக்கு வழக்கு முடிந்ததும் அவருக்கு அதை கொடுக்கலாம் என்று நினைத்த சமயத்தில் தான் அவர் எங்கள் மீது புகார் அளித்து வழக்கு தொடர்ந்தார். அதனால் தற்போது நீதிமன்றத்திலேயே எங்கள் கணக்குகளை ஒப்படைத்து விட்டோம். நீதிமன்றம் என்ன தொகை கொடுக்க சொல்கிறதோ அதை தருவதற்கு தயாராக இருக்க வேண்டும். விரைவில் நல்ல தீர்ப்பு வரும். நான் கைதாகவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.