ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் பாடலாசிரியர் சிவசக்தி தத்தா. இவர் பிரபல இசைமையப்பாளரும், ஆஸ்கர் வென்றவருமான கீரவாணியின் தந்தை. சிவசக்தி தத்தாவின் மூத்த சகோதரர் பெயர் எழுத்தாளர் விஜேயந்திர பிரசாத். இவர் பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் தந்தை ஆவார். ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' படத்துக்கும், 'ஆர்ஆர்ஆர்' படத்துக்கும் இசையமைத்தவர் கீரவாணி. இதில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் பாடலுக்கு தான் ஆஸ்கர் வென்றிருந்தார் கீரவாணி.
வயோதிகம் காரணமாக சிவசக்தி தத்தா இன்று காலமானார். அவரின் மறைவை அறிந்த டோலிவுட் உலகம், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி தமது இரங்கலை வெளியிட்டு உள்ளார்.
மறைந்த சிவசக்தி தத்தா பாடலாசிரியராக மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்தவர். தெலுங்கு சினிமா உலகில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். சிவசக்தி தத்தாவின் இறுதிச்சடங்கு எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.