கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார். நாகார்ஜுனா ஐதராபாத்தில் தும்மிடி குண்டா பகுதியில் 'என் கன்வென்ஷன் சென்டர்' என்ற பெயரில் பிரமாண்ட அரங்கம் கட்டி உள்ளார். இந்த அரங்கம் திருமணம், விழாக்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த இது வாடகைக்கு விடப்படுகிறது. வாடகை பல லட்சம்.
இந்த அரங்கத்தை நாகார்ஜுனா நீர்பாசன ஏரியை ஆக்கிரமித்து கட்டி இருப்பதாக ஜனம் கோசம் மானசாக்ஷி என்ற அறக்கட்டளை அமைப்பின் தலைவர் காசிரெட்டி பாஸ்கர ரெட்டி என்பவர் மாதப்பூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகார் மனுவில், “பல நூறு கோடிகள் மதிப்பிலான 3.30 ஏக்கர் நிலத்தில் விதிகளை மீறி என் கன்வென்ஷன் சென்டரை நாகார்ஜுனா கட்டி இருக்கிறார். நீர் நிலை மற்றும் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டி உள்ள இந்த அரங்கத்தின் மூலம் பல வருடங்களாக கோடிக்கணக்கில் சம்பாதித்து இருக்கிறார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு நிலத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை மீட்டு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் நாகார்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.