ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

ஆனந்த ராகம், மீனாட்சி பொண்ணுங்க போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ரிஹானா பேகம். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பொன்னி' சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக நடித்த இவர், பின்னர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த நிலையில் ரிஹானா மீது ராஜ் கண்ணன் என்ற ஓட்டல் அதிபர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 20 லட்சம் பண மோசடி செய்ததாக கூறியுள்ளார்.
அவர் தனது புகார் மனுவில் மேலும் கூறியிருப்பதாவது: 'பாண்டியன் ஸ்டோர்' உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள நடிகை ரிகானா பேகம், நண்பர் மூலம் எனக்கு அறிமுகமானார். என்னுடன் நட்பாக பழகிய அவர், தனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும் கூறினார். எனக்கும் திருமணம் ஆகாததால் ரிகானா பேகத்தை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது தாய் கூறினார். அதன்பிறகு நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். ஒரு கட்டத்தில் நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். இதனால் அவர் கேட்ட நகை உள்ளிட்ட பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்தேன். 20 லட்சம் வரை அவருக்காக செலவு செய்தேன்.
கடந்த ஆண்டு அவரது உறவினர்கள் முன்னிலையில் ரிகானா பேகத்தின் கழுத்தில் நான் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பிறகுதான் அவர் முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் அவருடன் தொடர்பில் இருப்பதும், திருமண ஆசை காட்டி என்னிடம் நகை, பணத்தை வாங்கி மோசடி செய்ததும் தெரிந்தது. ரிகானா பேகத்தின் மீது நடவடிக்கை எடுத்து எனது நகை, பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறி உள்ளார். மனுவை விசாரித்த காவல்துறை போலீசில் ஆஜராகுமாறு ரிஹானாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக ரிஹானா வெளியிட்டுள்ள வீடியோவில் "ராஜ்கண்ணன், தனது தொழிலை விரிவுபடுத்துவதாகவும், அதில் கிடைக்கும் லாபத்தில் பங்கு தருவதாகவும் கூறி என்னிடம் இருந்து 18 லட்சம் வாங்கினார். ஆனால் அவர் அதன்பிறகு எந்த பணத்தையும் எனக்கு தரவில்லை. அடிக்கடி ரவுடிபோல் என்னை கத்தியை காட்டி மிரட்டி வந்தார். அவர் தங்க சங்கிலி என்று கூறி எனது கழுத்தில் அணிவித்தார். ஆனால் அது இந்துக்கள் அணியும் தாலி போல் இருந்ததால் கழற்றி வைத்துவிட்டேன். எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் ராஜ் கண்ணன் தான்" என்று பேசி உள்ளார்.