எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை |
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் சில மாதங்களுக்கு முன்பு தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவரை தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி டார்ச்சர் செய்தார் என்பதற்காக கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்த நிலையில் பலமுறை அவர் ஜாமீனுக்கு விண்ணப்பித்தும் அது நிராகரிக்கப்பட்டது. கடைசியாக சில வாரங்களுக்கு முன்பு தான் முதுகு வலியால் தொடர்து அவதிப்படுவதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளார்கள் என்றும் நீதிமன்றத்தில் அளித்த ஜாமீன் மனுவில் புதிய கோரிக்கை வைத்தார்.
அதை பரிசீலித்த நீதிமன்றமும் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு திரும்புவதற்காக ஆறு வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் அவருக்கு முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்கான தேதி இன்னும் குறிக்கப்படவில்லை என்றும் அது இன்னும் தாமதமாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் அவருடைய ரத்த அழுத்தம் இன்னும் ஒரு சீராக இல்லை என்றும் அவருக்குள் இருக்கும் டென்ஷன் காரணமாக ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பதால் இந்த அறுவை சிகிச்சையை தற்போது செய்தால் அது அபாயமாக கூட முடியலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்பதால் இன்னும் அதற்கான தேதி இதுதான் என மருத்துவர்கள் முடிவு செய்ய வில்லையாம். தற்போது அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனில் மூன்று வாரங்கள் கழிந்துவிட்ட நிலையில் இனி எப்போது அறுவை சிகிச்சை நடைபெறும், அதன்பிறகு அவர் எப்போது குணமாகி சிறை திரும்புவது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அது மட்டுமல்ல அவர் தனது ஜாமீனை நீட்டிப்பதற்காக தான் இது போன்ற ஒரு நாடகம் ஆடுகிறார் என்றும் காவல்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.