நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் சக்சஸ் மீட்டிலும் கலந்து கொண்ட மம்மூட்டி | மூன்று முடிச்சு சீரியலில் என்ட்ரி தரும் மிதுன் | மறுபிறவி தந்த கிருஷ்ணதாசி - நளினி பேட்டி | பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா | பொங்கல் போட்டியில் முந்தும் 'மத கஜ ராஜா' | ஒரே நாளில் வசூல் அப்டேட்டை நிறுத்திய 'கேம் சேஞ்ஜர்' | நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் 'வாடிவாசல்' | ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு |
நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சலார் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை. தெலுங்கில் மட்டும் இந்த படம் வெற்றி பெற்றுள்ளது. தமிழ் உள்ளிட்ட பிற மாநிலங்களில் வரவேற்பை பெறவில்லை. அதேசமயம் இதற்கு முன்னதாக வெளியான பிரபாஸின் மூன்று படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவிய நிலையில் இந்த படம் ஓரளவுக்கு அவருக்கு கை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் சலார் திரைப்படம் ஸ்பானிஷில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வரும் மார்ச் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. இது குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது. அதேபோல வரும் ஏப்ரலில் ஜப்பான் மொழியிலும் இந்தப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.