ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | மகாராஜா படத்தால் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குனரிடம் வந்த அழைப்பு | ஏழு மலை ஏழு கடல் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரீ ரிலீஸ் ஆகும் ரஜினி முருகன் | ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் | கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி உடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய விஜய் | கேம் சேஞ்சர் படத்தின் ரிசல்ட் ஏமாற்றம் அளிக்கிறது : இயக்குனர் ஷங்கர் | அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு | பெரிய படங்ளை வாங்கிய ஓடிடி நிறுவனம் | நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் சக்சஸ் மீட்டிலும் கலந்து கொண்ட மம்மூட்டி |
கடந்த 2021ல் கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த ரிஷப் ஷெட்டியே இந்த படத்தை இயக்கியும் இருந்தார். கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களை மையப்படுத்தி, பூர்வகுடிகளின் நில உரிமை பற்றி பேசி இருந்த இந்தப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாது தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு எல்லா இடங்களிலும் வரவேற்பை பெற்றது
குறிப்பாக இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்த ரிஷப் ஷெட்டி, கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற தெய்வ கோலா (பூத கோலா) என்கிற பண்டிகையின் போது சாமி ஆடுபவராக கொஞ்ச நேரமே வந்து செல்லும் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதுமட்டுமல்ல படத்தில் அவர் நடித்த அந்த தெய்வ கோலா நிகழ்ச்சியும் அதன் பின்னணியில் ஒலித்த பாடலும் இசையும் ரசிகர்களை மெய் மறக்க செய்தது.
இந்த நிலையில் தற்போது மங்களூரில் அதேபோன்று சமீபத்தில் நடைபெற்ற தெய்வ கோலா நிகழ்ச்சியில் ரிஷப் ஷெட்டி நேரில் கலந்து கொண்டார்.. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.