Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அப்படி ஒன்றும் அவசியம் இல்லை ; ஓடிடி நிறுவனத்தை அதிர வைத்த 'சூ ப்ரம் சோ' தயாரிப்பாளர்

10 பிப், 2026 - 11:00 IST
எழுத்தின் அளவு:
Theres-no-need-for-that-Su-From-So-producer-shakes-up-OTT-industry
Advertisement


கன்னடத்தில் கலந்த ஜூலை மாதம் சிறிய பட்ஜெட் படமாக வெளியான படம் 'சூ ப்ரம் சோ'. இயக்குனரும் நடிகருமான ராஜ் பி.ஷெட்டி இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை அவரே தயாரித்தும் இருந்தார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் 100 கோடிக்கும் அதிகமான வசூலையும் குவித்தது. ஹிந்தியில் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார்கள்.

சமீபத்தில் இந்த படத்திற்கான ஓடிடி வியாபாரம் குறித்து தயாரிப்பாளர் ராஜ் பி ஷெட்டி கூறும்போது, “இந்த படம் வெளியாவதற்கு முன்னதாக எந்த ஓடிடி நிறுவனமும் இந்த படத்தை வாங்க முன்வரவில்லை. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் படம் நன்றாக ஓடுவதை பார்த்து ஒரு ஓடிடி நிறுவனம் மிகக்குறைந்த தொகைக்கு இதன் ஓடிடி உரிமையை கேட்டது.

ஆனால் அவர்கள் கேட்ட தொகைக்கு கொடுத்தால் கன்னட சினிமாவின் தரத்தை நாமே வேண்டுமென்றே குறைத்தது போல் ஆகிவிடும் என்று நான் நினைத்தேன். அதனால் எனக்கு தேவையான பணம் தியேட்டர்கள் மூலமே வந்து கொண்டிருக்கிறது என்று கூறி அவர்கள் பேசிய டீலுக்கு ஒப்புக்கொள்ள மறுத்தேன். அதன் பிறகு அவர்களாகவே முன்வந்து பேசியதை விட இரு மடங்கு தொகை அதிகம் தருவதாக கூறி இந்த படத்தின் ஓடிடி உரிமையை வாங்கினார்கள். அதனால் உங்கள் படத்தின் மீது நம்பிக்கை இருந்தால் தியேட்டர்களில் அதை ஓடவிட்டு அதன்பிறகு அதன் ஓடிடி உரிமத்தை விலை பேசுங்கள்” என்று கூறியுள்ளார் ராஜ் பி.ஷெட்டி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டொவினோ தாமஸ் படத்தில் இணைந்த 'சர்வம் மாயா' நாயகிடொவினோ தாமஸ் படத்தில் இணைந்த ... சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் 17ம் தேதி ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் 17ம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap