Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

டொவினோ தாமஸ் படத்தில் இணைந்த 'சர்வம் மாயா' நாயகி

10 பிப், 2026 - 10:56 IST
எழுத்தின் அளவு:
Sarvam-Maya-joins-Tovino-Thomas-film-as-heroine
Advertisement

கடந்த டிசம்பர் மாதம் மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் அகில் சத்யன் இயக்கத்தில் 'சர்வம் மாயா' திரைப்படம் வெளியானது. பீல் குட் ஹாரர் காமெடி படமாக வெளியான இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி படமாக அமைந்தது. அது மட்டுமல்ல இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரியா ஷிபுவுக்கு இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று தந்துள்ளது. குறிப்பாக 'பிரேமலு' படத்தின் மூலம் மமிதா பைஜுக்கு கிடைத்த வரவேற்பை போல 'சர்வம் மாயா' படத்தில் இவர் நடித்த டெலுலு கேரக்டர் ரசிகர்களை வசியம் செய்தது.

அடுத்ததாக அவர் நடிக்கும் படம் குறித்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது மலையாளத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப் மற்றும் வினித் சீனிவாசன் ஆகியோர் இணைந்து நடிக்கும் 'அதிரடி' என்கிற திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. சுவாதி ஆர் கிருஷ்ணா என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கும் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் அருண் அனிருத்தன் என்பவர் இயக்கி வருகிறார். வரும் மே 14ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'பேட்ரியாட்' டப்பிங்கை நிறைவு செய்த மோகன்லால்'பேட்ரியாட்' டப்பிங்கை நிறைவு ... அப்படி ஒன்றும் அவசியம் இல்லை ; ஓடிடி நிறுவனத்தை அதிர வைத்த 'சூ ப்ரம் சோ' தயாரிப்பாளர் அப்படி ஒன்றும் அவசியம் இல்லை ; ஓடிடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap