இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் | வெற்றிமாறன் படக் கம்பெனியை மூடியது ஏன் |
தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாது மொத்த தென்னிந்திய திரையுலகிலும் உள்ளவர்களின் மற்றும் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக இருப்பது நடிகர் பிரபாஸ் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்? யாரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்பதுதான். சக நடிகையான அனுஷ்காவை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் இருவரும் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர்.
அதேசமயம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபாஸின் சித்தி, விரைவில் பிரபாஸின் திருமணம் நடைபெறும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது நடிகர் ராம்சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்ஜர்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடிகர் பாலகிருஷ்ணா நடத்தும் 'அன்ஸ்டாபபிள்' என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் பாலகிருஷ்ணா பிரபாஸின் திருமணம் குறித்து உங்களுக்கு தெரிந்த உண்மையை சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ராம்சரண், ''பிரபாஸ் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்.. அவரது மனைவி ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி நகருக்கு அருகிலுள்ள கானபவரம் என்கிற ஊரைச் சேர்ந்தவராக இருப்பார்'' என்று கூறியுள்ளார். பிரபாஸின் சித்தி கூறியதை வைத்து பார்க்கும்போதும் தற்போது ராம்சரண் கூறியதை வைத்து பார்க்கும்போதும், விரைவில் பிரபாஸின் திருமணத்திற்கான அறிவிப்பு வெளியானாலும் ஆகலாம் என்று தெரிகிறது. ராம்சரணின் இந்த தகவலால் பிரபாஸின் ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர். அதேசமயம் அப்படியானால் அந்தப்பெண் அனுஷ்கா இல்லையா, பிரபாஸ் அனுஷ்கா திருமணம் நடக்காதா என்றும் பல ரசிகர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.