டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
1977ம் ஆண்டு வெளிவந்த “16 வயதினிலே” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தமிழ் திரையுலகின் போக்கையே மாற்றி, ஒரு பெரும் புரட்சியையே உண்டு பண்ணியவர்தான் இயக்குநர் பாரதிராஜா. பின்னாளில் தமிழ் சினிமாவின் ஆளுமை இயக்குனர்களாக பார்க்கப்பட்ட மணிவண்ணன், மனோபாலா, கே ரங்கராஜ் போன்றோர் கூட, பாரதிராஜா என்ற பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்ற மாணவர்கள். அவர்களில் மிகவும் குறிப்பிடும்படியான ஒரு தலைசிறந்த மாணவர்தான் இயக்குநர் கே பாக்யராஜ்.
பாரதிராஜாவின் “16 வயதினிலே” திரைப்படத்தில் ஒரு உதவியாளராக அறிமுகமாகி, அவரது “கிழக்கே போகும் ரயில்”, “சிகப்பு ரோஜாக்கள்”, “நிறம் மாறாத பூக்கள்”, “புதிய வார்ப்புகள்”, “ஒரு கைதியின் டைரி” போன்ற ஒரு சில படங்களில் இணைந்து பணிபுரிந்து வந்த இயக்குநர் கே பாக்யராஜ் அவரது குருநாதரான இயக்குநர் பாரதிராஜாவால்தான் கதாநாயகன் அவதாரமும் எடுத்தார்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த கே பாக்யராஜ், பாரதிராஜாவின் சொந்தப் படமான “புதிய வார்ப்புகள்” திரைப்படத்திற்கும் வசனம் எழுதிக் கொண்டிருந்தார். படத்தின் நாயகி வேடத்திற்கு அப்போது மாடல் அழகியாக இருந்த ரத்தி அக்னிஹோத்ரியைத் தேர்வு செய்துவிட்டுக் கதாநாயகனாக நடிக்க வைக்க ஒரு புது முகத்தைத் தேடிக் கொண்டிருந்த பாரதிராஜாவின் முதல் தேர்வு இசைஞானி இளையராஜாவின் சகோதரரும், திரைத்துறை வித்தகருமான கங்கை அமரனாக இருந்தார். அதன்பின் அவர் பார்த்த பலரும் பொருந்தி வராததால் தனது யூனிட்டில் இருந்த கே பாக்யராஜுக்கு கண்ணாடி அணிவித்து, வெவ்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்துப்பார்த்து விட்டு அவரையே தேர்ந்தெடுத்திருப்பதாக அறிவித்தார் இயக்குநர் பாரதிராஜா.
நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு ஓடி வந்த கே பாக்யராஜ், இரண்டு இயக்குனர்களிடம் உதவி இயக்குநராகவும், இரண்டு திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனகர்த்தாவாகவும், இரண்டு படங்களில் எடுபிடி நடிகராகவும் பணியாற்றிய பின்னர் ஓர் அரிய வாய்ப்பாக கிடைத்ததுதான் இந்த “புதிய வார்ப்புகள்” திரைப்படத்தில் வரும் பள்ளி ஆசிரியர் சண்முகமணி என்ற கதாநாயகன் கதாபாத்திரம்.