பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். கடந்த டிசம்பர் மாதம் இவர் இயக்கிய விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. முதல்பாகத்தை விட இரண்டாம் பாகம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. என்றாலும் படம் லாபம் தந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விடுதலை 2 வெளியாகி இன்றோடு 25 நாட்கள் ஆகிறது. இதை மகிழ்ச்சியோடு அறிவித்துள்ள இப்படத்தை தயாரித்த ஆர்எஸ் இன்போடெயின்ட்மென்ட் நிறுவனம், ‛இந்த படத்தை வெற்றி படமாக்கிய படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி' தெரிவித்துள்ளது. அதோடு தாங்கள் தயாரிக்கும் இரண்டு பட அறிவிப்பையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி ஒரு படத்தில் தனுஷ் நடிக்கிறார், வெற்றிமாறன் இயக்குகிறார். பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் படங்களை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளனர்.
மற்றொரு படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்க, சூரி நாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே தங்களது நிறுவனத்தில் விடுதலை 1, 2வில் நடித்த சூரியே இந்த படத்திலும் நாயகனாக தொடருகிறார். வெற்றிமாறன் குழுவில் இருந்தவர் மதிமாறன். ஏற்கனவே செல்பி என்ற படத்தை இயக்கி உள்ளார். விரைவில் இந்த படம் துவங்க உள்ளது.