இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தெலுங்கு நடிகை நிதி அகர்வால் தமிழில் 'ஈஸ்வரன், கலகத்தலைவன்' உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக பல படங்களில் நடித்து வந்த இவர் கடந்த சில வருடங்களாகவே பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் 'ஹரிஹர வீர மல்லு' படமும் மற்றும் பிரபாஸ் நடிக்கும் 'ராஜா சாப்' படத்திலும் மட்டுமே கதாநாயகியாக நடித்து வருகிறார். எதற்காக இவருக்கு வாய்ப்பு வரவில்லை என்கிற காரணத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் நிதி அகர்வால்.
அதாவது 2021 கோவிட்டுக்கு முன்பாக ஹரிஹர வீரமல்லு படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமான நிதி அகர்வால் அப்போது பவன் கல்யாணின் அரசியல் பயணம் மற்றும் கோவிட் ஆகியவை காரணமாக எப்போதெல்லாம் பவன் கல்யாணுக்கு படப்பிடிப்பு இருக்கிறதோ அப்போதெல்லாம் இவர் வந்து நடிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளாராம். அதனால் வேறு படங்களில் நடிக்க கால்ஷீட் கேட்டு வந்தபோது சரியான தேதிகளை கொடுக்க முடியாததால் அந்த பட வாய்ப்புகளை இழந்தேன் என கூறியுள்ளார்.
ஆனால் ஹரிஹர வீரமல்லு படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் ராஜா சாப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு அவரை தேடி வந்தது. அப்போது பட தயாரிப்பு நிறுவனத்திடம் நிலைமையைச் சொல்லி அந்த படத்தில் நடிக்க அனுமதி கேட்டபோது ஏதோ பெரிய மனதுடன் அந்த படத்தில் நடிக்க அனுமதித்தார்களாம். இதனால் ஹரிஹர வீரமல்லுவின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்துள்ளனர் என்று கூறியுள்ளார். இதனால் தற்போது இரண்டு படங்களின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத், விஜயவாடா என்று மாறிமாறி பயணித்து நடித்து வருகிறாராம் நிதி அகர்வால்.