ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான மூன்று கதாநாயகிகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தை தொடர்ந்து தமிழ், அதன் பிறகு அப்படியே தெலுங்கு திரையுலகில் நுழைந்து தற்போது பிஸியான நடிகையாக மாறிவிட்டார். பிரேமம் என்கிற காதல் படத்தில் நடித்த இவர் தற்போது காதல் குறித்து அதிர்ச்சி அளிக்கும் விதமான ஒரு கருத்தை கூறியுள்ளார்.
அதாவது காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் இந்த சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்ட போது, “ஐ லவ் யூ பார் எவர்” என்று சொல்வதுதான் உலகத்திலேயே மிகப்பெரிய பொய். காரணம் எங்கேயும் நடக்காத ஒன்று இது. அது மட்டுமல்ல நீதான் என் உயிர், நீ இல்லாமல் நான் இல்லை இது போன்ற டாக்ஸிக் காதலில் சிக்கி இருப்பவர்கள் தயவு செய்து இப்போதே ஓடிவிடுங்கள் என்பது தான் என்னுடைய சிம்பிளான அறிவுரை” என்றும் கூறியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.
காதல் மீது இவருக்கு என்ன இவ்வளவு வெறுப்பு என்று ரசிகர்கள் குழம்பி போய் இருக்கின்றனர்.