வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் | சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன் | 5 வருட காதலை வெளிப்படையாக அறிவித்த அருண் - அர்ச்சனா | சிம்பு 51வது படம் ‛மன்மதன்' பாணியில் உருவாகிறதா? |
பல சினிமா மேடைகளில் ஆண்கள் குறிப்பாக நடிகர்கள், இயக்குனர்கள் ஜாலியாக பேசுகிறோம் என்றோ, எதிரில் அமர்ந்திருப்பவர்களை சிரிக்க வைப்பதற்காக பேசுகிறோம் என்று நினைத்துக் கொண்டோ காமெடி என்கிற பெயரில் அங்கு இருக்கும் ஒரு சிலரை உருவ கேலி செய்வது உண்டு. அப்படி தெலுங்கு திரை உலகில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. விரைவில் மசாகா என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை திரிநாத ராவ் நக்கினா என்பவர் இயக்கியுள்ளார். சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக அன்ஷு அம்பானி என்பவர் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் பேசிய இயக்குனர், “தெலுங்கில் நடிகைகள் புஷ்டியாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். இந்த படத்தின் கதாநாயகி அன்ஷு, நாகார்ஜுனா நடித்த மன்மதடு படத்தில் பார்த்தபோது குண்டாக இருந்தார். இவருக்காகவே அந்த படத்தை நான் பலமுறை பார்த்தேன். ஆனால் இப்போது ஒல்லியாகிவிட்டார். இவர் மீண்டும் முன்பு போல நன்றாக குண்டாக வேண்டும். ஏனென்றால் தெலுங்கு சினிமாவுக்கு இது பத்தாது” என்று கூறினார்.
சம்பந்தப்பட்ட நடிகை அன்ஷு அம்பானி அங்கே இருந்தாலும் கூட இவர் பேசியதன் முழு விவரம் தெரியாததால் அமைதியாக இருந்து விட்டார். ஆனால் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவியதுடன் இயக்குனர் திரிநாத ராவுக்கு பல பக்கங்களில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து தன்னுடைய பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்டுள்ள இயக்குனர் திரிநாத்ராவ் இது குறித்து அவர் கூறும்போது, “பல பெண்கள் இந்த டீசர் லாஞ்சில் நான் பேசிய வார்த்தைகள் குறித்து ரொம்பவே வருத்தப்பட்டதாக எனக்கு தெரியவந்தது. அது ஒரு துரதிஷ்டவசமானது என்று நான் கூறுவேன். அது எதுவுமே திட்டமிடப்பட்டது அல்ல. அங்கிருந்தவர்கள் ரசித்து சிரிப்பார்கள் என்கிற நோக்கில் தான் நான் அப்படி பேசினேன்” என்று கூறியுள்ளார்.
படத்தின் கதாநாயகன் சந்தீப் கிஷன் இது குறித்து வெளியிட்டுள்ள சோசியல் மீடியா பதிவில், “நேற்று மசாகா பட விழாவில் இயக்குனர் நக்கினா திரிநாத ராவ் பேசும்போது சில வார்த்தைகளை தவறவிட்டது துரதிர்ஷ்டவசமானது. அது மட்டுமல்ல அது ஒரு தவறான முன்னுதாரணமாக கூட அமைந்து விட்டது. நாம் இது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இது போன்ற கொஞ்சம் மலிவான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக அன்ஷு அம்பானி மற்றும் அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் உங்களால் தான் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.