கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் 'பெருசு' | கார் ரேஸ் : அஜித்திற்கு குவியும் வாழ்த்துகள் | மோகன்லாலை இயக்கும் தமிழ் இயக்குனர் | வெற்றிமாறன் - தனுஷ், மதிமாறன் புகழேந்தி - சூரி : ஒரேநாளில் இரு பட அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம் | பிளாஷ்பேக்: கே பாக்யராஜ் என்ற புதிய நாயகனை வார்த்தெடுத்த “புதிய வார்ப்புகள்” | பிரபாஸின் மணப்பெண் இந்த ஊரை சேர்ந்தவர்: நடிகர் ராம்சரண் கொடுத்த 'க்ளூ' | பவன் கல்யாண் பட அக்ரிமெண்டில் சிக்கி பட வாய்ப்புகளை இழந்த நிதி அகர்வால் | உயிரோடு இருப்பேனா என அச்சம் ஏற்பட்டது ; லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்தில் இருந்து தப்பிய ப்ரீத்தி ஜிந்தா | ரஜினியின் பில்லா தோல்வி படமா? - விஷ்ணுவர்தனுக்கு கண்டனம் | நடிகை ஹனிரோஸ் மீதான சர்ச்சை கருத்து.. முன்ஜாமின் விண்ணப்பித்த மீடியா ஆர்வலர் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகில் கடுமையான காட்டுத்தீ திடீரென பரவியது. இதில் பல உயிர்கள் பலியாகின. இந்த சம்பவத்தை நேரில் இருந்து பார்த்ததுடன் அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியும் உள்ளார் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இவர் பாலிவுட்டில் மட்டுமே அதிக அளவில் படங்கள் நடித்திருந்தாலும் மணிரத்தனத்தின் 'உயிரே' போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்தான். சமீபத்தில் இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று இருந்த போது தான் காட்டுத்தீ பரவலை நேரில் பார்த்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நாங்கள் இருந்த பகுதிக்கு மிக அருகில்தான் காட்டுத்தீ மளமள என பரவியபோது, நாளை என்கிற ஒரு நாளை மீண்டும் பார்ப்பேனா என்று என் மனதிற்குள் அச்சம் தோன்றியது. நண்பர்களும் அருகில் இருந்த குடும்பத்தினரும் சாம்பலின் தாக்கம், புகை ஆகியவற்றிலிருந்து தப்பிப்பதற்காக அங்குமிங்கும் ஓடினர். குழந்தைகளும் பெரியவர்களும் ரொம்பவே பாதிக்கப்பட்டனர். காற்றும் கூட அமைதி கொள்ளாமல் இதை தீவிரப்படுத்தியது. இந்த நிகழ்வை பார்த்து நான் ரொம்பவே மனம் நொறுங்கிப் போனேன். அதேசமயம் நாங்கள் இப்போது பாதுகாப்பாக இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.