Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

உயிரின் ஓசை

உயிரின் ஓசை,Uyirin Osai
  • உயிரின் ஓசை
  • பிஜூமேனன்
  • ஸ்வேதா மேனன்
  • இயக்குனர்: பிளஸ்சி
17 நவ, 2013 - 12:42 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » உயிரின் ஓசை

ஸ்வேதா மேனன் நடித்து மலையாள சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய களிமண் தமிழில் வருகிறது. பிளஸ்சி டைரக்ட் செய்திருந்த இந்தப் படத்தில் ஸ்வேதா மேனனின் ஒரிஜினல் பிரசவகாட்சி படமாக்கப்பட்டு படத்தில் சேர்க்கப்பட்டது. இந்த காட்சியை காட்டக்கூடாது என்று சில அமைப்புகள் போராட்டம் நடத்தினார்கள். சிலர் கோர்ட்டுக்கு போனார்கள் அனைத்தையும் மீறி படம் வெளிவந்து வெற்றி பெற்றது.

சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடும் ஸ்வேதா மேனன், தன் கணவர் மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஒரு விபத்தில் சிக்கும் கணவர் மூளைச்சாவு அடைகிறார். அவரது குழந்தைக்கு தாயாக விரும்பும் ஸ்வேதா அவரது விந்தனுவை எடுத்து தன் கருவில் செலுத்தி தாயாகிறார். கணவன் மரணத்துக்கு பிறகு குழந்தையை பிரசவித்து அந்த குழந்தையிடம் தன் கணவனை அவள் காண்பது மாதிரியான படம். இந்தப் படத்தில் நடித்தபோது ஸ்வேதா மேனன் நிஜ கர்ப்பவதியாக இருந்தார். அவரது பிரசவ காட்சியை படம்பிடித்து படத்தில் சேர்த்தார் ப்ளஸ்சி. ஒரு பெண்ணின் பிரசவ வேதனை நேரில் பார்க்கும் ஆண்கள் திருந்த வேண்டும் என்பதே இந்த காட்சியின் நோக்கம் என்று சொல்லப்பட்டது.

இப்போது இந்தப் படத்தை தயாரிப்பாளர் அனூப் பிரதாப் தமிழில் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார். டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. தமிழ் வசனங்களை சபரிநாதன் எழுதியுள்ளார். தமிழ் நடிகைகள் சுஹாசினி, லட்சுமி ராமகிருஷ்ணன், ஆகியோரும் நடித்திருப்பதால் அசல் தமிழ்படம் போலவே இருக்குமாம்.

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in