
பிரபாஸ் பிறந்தநாளில் அடுத்தடுத்து வந்த படங்களின் அப்டேட்ஸ்
நேற்று அக்டோபர் 23 அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் படங்களின் அப்டேட்ஸ்களை பிறந்தநாள் வாழ்த்துடன் அடுத்தடுத்து வெளியிட்டார்கள்.
ஹனுராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் "பௌசி" படத்திற்காக மைத்ரி மூவி மேக்கர்ஸ் வீயோ ஒன்றை வெளியிட்டுள்ளது. சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலகட்ட வீடியோவாக அது உள்ளது. இப்படம் 2027 மார்ச் 19ம் தேதி வெளியாக உள்ளது.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் "ஸ்பிரிட்" படம் 2027 அக்டோபர் 29 தீபாவளியன்று வெளியாகும் என ஒரு வாரம் முன்பே அறிவித்திருந்தார்கள். நேற்று இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா ஒரு சரக்கு பாட்டிலைத் திறக்க, அதை பிரபாஸ் பார்க்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, "உற்சாகம் மேலோங்கி உள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
"கல்கி 2898 ஏடி" தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லி, “கல்கி 2898 ஏடி யுனிவர்ஸ்-ன் அடுத்த அத்தியாயத்திற்கு நல்வரவு,” என்று பதிவிட்டுள்ளார்கள்.
பிரபாஸுக்கு இயக்குனர் பிரசாந்த் நீல் வாழ்த்து சொல்லும் வீடியோ ஒன்றை மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் பிரசாந்திடம், எங்கே பிறந்தநாள் பரிசு, சலார் 2 எப்போது என பிரபாஸ் கேட்க, அதற்கு பிரசாந்த் நீல், "அடுத்த வருடம் ஜூன்" என பதிலளிக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
பிரபாஸின் பிறந்தநாளை முனனிட்டு அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளதால் பிரபாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!