
கந்தசாமி விக்ரம் பாணியில் நடிக்கும் நவாசுதீன் சித்திக்
பாலிவுட்டின் குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகரான நவாசுதீன் சித்திக் தமிழில் "பேட்ட" படத்தில் சிங்காரம் கதாபாத்திரத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்ததன் மூலம் இங்கே பிரபலமானவர். இந்த நிலையில் தற்போது அவர் "கபூத்தர்" என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குனர் ஈசான் சர்மா இயக்கும் இந்த படத்தில் அவர் தெருவோர துப்பறியும் நிபுணராக நடிக்கிறார்.
அதாவது மக்கள் ஜின்களுக்கு (கடவுளாக நினைப்பவர்களுக்கு) எழுதும் ரகசிய கடிதங்களைப் படித்து அதிலிருந்து வாடிக்கையாளர்களை தேடி கண்டுபிடிக்கும் விசித்திரமான வேலையை செய்கிறார். கிட்டத்தட்ட கந்தசாமி படத்தில் மக்கள் தங்களின் குறைகளை காகிதத்தில் எழுதி மரத்தில் கட்டி தொங்கவிட அதைப் படித்து விக்ரம் ஆக்சன் எடுப்பது போன்று தான் இதுவும். அதே சமயம் காமெடி கலந்த ஒரு கதாபாத்திரமாக இது உருவாகி இருக்கிறதாம். பழைய டில்லியின் பாரம்பரிய கட்டடங்கள் மற்றும் பழமையான விதிகளின் பின்னணியில் இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!