
பிளாஷ்பேக் : கண்ணதாசனை கடனிலிருந்து மீட்ட தேவிகா
"ஷீஷ் பரிஷ்" வங்காள மொழி திரைப்படம் அங்கு தோல்வி அடைந்தது. அந்தப் படத்தை பார்த்த கண்ணதாசன் இதை வெற்றி படமாக்க முடியும் என்று நம்பினார். அதனால் துணிச்சலுடன் படத்தின் உரிமத்தை வாங்கி தயாரித்தார். "கடனாளி மேலும் கடனாளியாக போகிறார்" என்று அப்போது பலர் அவரை கிண்டல் செய்தனர்.
ஆனால் "வானம்பாடி" மிகப்பெரிய வெற்றி பெற்று கவிஞரின் கடன்களை எல்லாம் அடைத்தது. அதற்குக் காரணம் தேவிகா என்ற மூன்றெழுத்து நடிகை. நான்கு தோற்றம், இரண்டு வேடம் என்று படத்தில் நடிப்பு ராட்சசியாக வெளிப்பட்டார் தேவிகா. அதோடு தேவிகா படம் எப்போது வெளிவரும் என்று அன்றைய இளைஞர்கள் காத்துக் கிடந்த காலம் அது.
"காத்திருந்த கண்கள்" சாவித்ரிக்குப் பிறகு, இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு வானம்பாடியில் தேவிகாவுக்கு வாய்த்தது. ஓ.ஏ.கே. தேவரைச் சுட்டு விட்டு, ரயிலில் விழுந்து தற்கொலைக்கு முயலும் மீனாவாகவும், கணவர் ஆர்.எஸ். மனோகரின் கொடுமை தாளாமல் வீட்டை விட்டு வெளியேறி, "பாடகி கவுசல்யா" என்ற பெயரில் வாழும் "அபலை சுமதி"யாகவும் மாறுபட்ட வேடங்கள் தேவிகாவுக்கு.
ஒளிப்பதிவாளர் ஜிஆர் நாதன் படத்தை இயக்குனர். கே.வி மகாதேவன் இசையமைத்தார். கங்கைக்கரை தோட்டம், தூக்கணாங்குருவிக் கூடு, ஊமைப் பெண் ஒரு கனவு கண்டால் , கடவுள் மனிதனாக, ஏட்டில் எழுதி வைத்தேன், யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம், போன்ற காலத்தால் அழியாத பாடல்கள் இடம் பெற்ற படமும் இதுதான்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!