சினிமா ஆனது அரிகொம்பன் வாழ்க்கை
நவ 18, 2026
Advertisement
மனிதர்களின் வாழ்க்கைதான் பயோபிக் வகை படங்களாக வெளிவரும். தற்போது 1980களில் வாழ்ந்த அரிகொம்பன் என்ற யானையின் வாழ்க்கை சினிமா ஆகியுள்ளது. கேரளாவின் சின்னக்கனல் மற்றும் இடுக்கி பகுதிகளில் அரிசி மற்றும் உணவுகளைத் தேடி கடைகள், வீடுகளைத் தாக்கிய யானைதான் அரிகொம்பன். மலையாளத்தில் "அரி" (அரிசி) மற்றும் "கொம்பன்" (கொம்பன் யானை) ஆகிய வார்த்தைகளின் கலவையாகும்.
அரி கொம்பன் அட்டகாசத்தை தாங்க முடியாத பொதுமக்கள் அரசிடம் புகார் அளிக்க அரசும், கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி மயக்க ஊசி போட்டு பிடித்து பெரியாற்றுத் தேசியப் பூங்கா மற்றும் பின்னர் தமிழ்நாட்டின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதிகளில் விடப்பட்டது.
அரிகொம்பனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம்தான் "அரிகொம்பன்" இதனை. எங்கேயும் எப்போதும்", "சென்னையில் ஒரு நாள்", "எங்க காட்டுல மழை", "சிக்கிக்கு சிக்கிகுச்சு", "காக்டைல்" உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த மிதுன் மகேஸ்வரன், தற்போது மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் "அரிகொம்பன்" படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
நாயகியாக கேரளத்தைச் சேர்ந்த தேவிகா கிருஷ்ணன் நடித்துள்ளார். "இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, அப்புக்குட்டி, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, மு.ராமசாமி, எதிர்நீச்சல் விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜய் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். டிசம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…