
மக்கள் காவலன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
இப்போது "இற இறகாக.." எனும் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. ஜோதி கண்ணா பாடல் வரிகளை எழுத நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து, பாடியுள்ளார். இந்தப் பாடல், நாயகன் தனது கடினமான உலகத்திலிருந்து விடுபட்டு, காதலியின் அன்பின் மூலம் காதலின் மீதான நம்பிக்கையை எவ்வாறு பெறுகிறான் என்பதை சித்தரிக்கிறது.
காவல் துறையைச் சார்ந்த ஒரு மனிதன் கண்ணியத்துடன் வாழ விரும்புகிறான். ஆனால் ஊழல் நிறைந்த அமைப்பு அவனை சூழும்போது அவன் எடுக்கும் முடிவு, அதனால் ஏற்படும் பாதிப்பு தான் படத்தின் ஒன்லைன். வருகிற டிசம்பர் 4ம் தேதி படம் ரிலீஸாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…